இந்தியாவின் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வரும் பி.ஐ.டி.ஸ் பிலானி அல்லது பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் 1964-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இந்த நிறுவனம் 'அறிவியல், தொழிற்நுட்பம், நவீனத்துவம்' என்ற நேருவின் கோட்பாட்டிற்கு இணங்க பிர்லா அவர்களால் தொடங்கப்பட்டது. இதன் வளாகத்தினுள்ளே நீங்கள் பாரம்பரியமும், அறிவியலும் கைகோர்த்து காட்சியளிக்கும் புதுமையை கண்டுணரலாம்.
இங்கு காணப்படும் கட்டிட வடிவமைப்புகள் நவீனமாகவும், அதே நேரத்தில் புராதானத்தையும் விட்டுக்கொடுக்காமல் கட்டப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு. அதிலும் குறிப்பாக பி.ஐ.டி.ஸ் கோபுரம் இந்த நிறுவனத்தின் அடையாளமாகவே விளங்கி வருகிறது.
பி.ஐ.டி.ஸ் பிலானிக்கு அருகில் இருக்கக்கூடிய தாபாக்களில் நீங்கள் விரும்பும் உணவை ருசித்து மகிழலாம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்,மே மாதங்களில் நடைபெறும் ஆண்டு விழா சமயத்தில் நீங்கள் பி.ஐ.டி.ஸ் வளாகத்துக்கு வருவது சிறப்பானதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications