ஜௌல்ஜிபி எனும் இந்த முக்கியமான சுற்றுலாத்தலம் பித்தோராகர் நகரிலிருந்து 68 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இது கோரி ஆறு மற்றும் காளி ஆறு ஆகியவை ஒன்று சேரும் ஸ்தலமாகும்.
இங்கு ஒரு வருடாந்திர திருவிழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தியா மற்றும் நேபாளிலிருந்து இந்த திருவிழாவில் கலந்து கொள்ள ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர்.
மகர சங்கராந்தியின்போது கொண்டாடப்படும் இந்த திருவிழா முதன்முதலாக 1914ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கொண்டாடப்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
கல்பாணி மலை எனும் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சம் ஜௌல்ஜிபி ஸ்தலத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்குள்ள ஒரு வெந்நீர் ஊற்றில் வெளிப்படும் நீருக்கு மருத்துவ குணங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது. இப்பகுதியில் அமைந்துள்ள வியாசர் குகைக்கும் சுற்றுலாப்பயணிகள் விரும்பி விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications