முன்ஷ்யாரி எனும் இந்த சிறிய நகரம் பித்தோராகர் நகரிலிருந்து 127 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இது ஜோஹர் எனும் பிரதேசத்திற்கான நுழைவாயிலாக அமைந்துள்ளது.
இந்த நுழைவாயில் பகுதி மில்லம், நாமிக் மற்றும் ரலாம் பனிமலைகளுக்கான பாதைகளை இணைக்கிறது. மஹேஷ்வர் குண்ட் மற்றும் தம்ரி குண்ட் ஆகிய ஏரிகள் இந்த இடத்தை சூழ்ந்துள்ளன.
கோரி கங்கா எனும் ஆறும் இப்பகுதியில் உற்பத்தியாவது குறிப்பிடத்தக்கது. முன்ஷ்யாலி புக்யால் என்று அழைக்கப்படும் காட்டு மலர்கள் நிரம்பிய பரந்த புல்வெளிப்பிரதேசம் இந்நகரத்தினை ரம்மியமாக சூழ்ந்துள்ளது.



Click it and Unblock the Notifications