பித்தோராகர் பகுதிக்கு விஜயம் செய்யும் பயணிகள் மிகவும் விரும்பும் பொழுதுபோக்கு அம்சமாக பனிச்சறுக்கு விளையாட்டு இப்பகுதியில் பிரசித்தி பெற்றுள்ளது. இங்குள்ள பெடுலி தர் எனும் மலைச்சரிவு பனிச்சறுக்கு விளையாட்டுக்கு ஏற்ற ஸ்தலமாக அறியப்படுகிறது.
சிப்லாகோட் எனும் இடத்திலும் பயணிகள் இந்த விளையாட்டில் ஈடுபடலாம். இது கடல் மட்டத்திலிருந்து 3090 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது. கைலா டாப் எனும் அழகிய அல்பைன் புல்வெளிப்பிரதேசமும் பனிச்சறுக்கு விளையாட்டிற்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications