அழகுநாச்சி அம்மன் கோயில், பொள்ளாச்சியிலிருந்து 80 கி.மீ. தொலைவில், வள்ளியரச்சல் என்ற ஊரைச் சேர்ந்த மக்களால், 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இங்கு மூலக்கடவுளாக விளங்கும் அழகுநாச்சி அம்மன், கொங்கு வெள்ளாளக் கவுண்டர் என்ற சாதியினரின் குல தெய்வமாகும்.
இக்குலத்தைச் சேர்ந்த சிலர் தங்கள் குல தெய்வத்தின் திருவுருவச்சிலையோடு இவ்விடத்துக்கு வந்ததாகவும், அவர்கள் இளைப்பாறும் சமயத்தில், அச்சிலை மாயமாக மறைந்து போனதாகவும், அதனால், அவர்கள் தங்கள் குலதெய்வத்துக்கு இங்கேயே கோயில் எழுப்ப முடிவு செய்ததாகவும் நம்பப்படுகிறது.
அவ்வாறு முடிவு செய்தபடியே, அவர்கள் அங்கேயே தங்கி, இக்கோயிலை எழுப்பி, பராமரித்து வந்துள்ளனர்.



Click it and Unblock the Notifications