கடற்கரை பகுதியில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் உலாவித்திரிவதற்கு மிகவும் ஏற்ற கடற்கரையாக பூம்புகார் கடற்கரை அமைந்துள்ளது. நகரச்சந்தடியிலிருந்து விலகி காணப்படுவதும் ஒரு கூடுதல் விசேஷம்.இருப்பினும் அலைகள் கடுமையாக இருக்கும் என்பதால் இக்கடற்கரையில் நீச்சல் விளையாட்டுகளை தவிர்ப்பது அவசியம்.
ஒரு காலத்தில் கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளிலிருந்து கப்பல்கள் வந்து நின்ற தமிழர் நாகரிகத்தின் தொன்மையான துறைமுகத்தினை மனக்கண்ணில் கொண்டு வந்தால் அந்த ஸ்தலத்தில் நிற்கின்றோம் என்ற சிலிர்ப்பை நிச்சயம் நம்மால் அனுபவிக்க முடியும். சுற்றுலாத்துறையிடமிருந்து வசதிகளையும் திட்டங்களையும் மேலும் எதிர்பார்க்கும் ஒரு பாரம்பரிய ஸ்தலமாக இந்த கடற்கரை காத்திருக்கிறது.



Click it and Unblock the Notifications