Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பழவேற்காடு » ஈர்க்கும் இடங்கள் » பழவேற்காடு ஏரி

பழவேற்காடு ஏரி, பழவேற்காடு

10

பழவேற்காடு ஏரி என்று தமிழில் அழைக்கப்படும் புலிகாட் ஏரி, இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர்நிலையாக உள்ளது. இந்தியாவின் இரண்டு மாநிலங்களான தமிழ் நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றின் எல்லைகளில் அமைந்திருக்கும் இந்த ஏரி தென்னிந்தியாவின் பகுதிகளிலிலிருந்து சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் கவரும் இடமாக இருக்கிறது. வங்காள விரிகுடாவில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா என்ற இடைப்பட்ட சிறு தீவுப்பகுதியால் இந்த ஏரி பிரிக்கப்பட்டிருக்கிறது.

விலங்குகள் மற்றும் பறவைகளால் நிரம்பியிருக்கும் பழவேற்காடு ஏரியானது, மீன்கள் விற்கும் வர்த்தக மையமாகவும் உள்ளது. இந்த ஏரிக்கு ஆரணி ஆறு, கலங்கி ஆறு மற்றும் சுவர்ணமுகி ஆறு ஆகியவற்றிலிருந்து நீராதாரம் கிடைக்கிறது.

வளமையான உயிர்பன்முகதன்மை மற்றும் சிறந்த இயற்கை அழகு ஆகியவற்றை கொண்டுள்ள இந்த புலிகாட் ஏரி சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்வையிட வேண்டிய இடமாகும்.

இந்த ஏரியில் பல்வேறு வகையிலான மீன் வகைகள், அரிய வகைப் பறவைகள் மற்றும் நல்ல எண்ணிக்கையிலான ஊர்வன உயிரினங்கள் மற்றும் நீர்த்தாவரங்கள் ஆகியவை இருந்தாலும் இங்கு வரும் பெலிகன் பறவைகளை பார்ப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்த ஏரிக்கு வந்து செல்ல மிகவும் ஏற்ற காலம் அக்டோபர் முதல் மார்ச் மாதங்கள் வரையே ஆகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue