அராங் எனப்படும் இந்த புராதன நகரம் ராய்பூர் நகரத்திலிருந்து 36 கி.மீ தொலைவில் உள்ளது. பண்டதேவல் கோயில் மற்றும் மஹாமயா கோயில் எனப்படும் பழமையாக கோயில்கள் இந்நகரத்தில் அமைந்துள்ளன.
பண்டதேவல் கோயில் அதன் கட்டிடக்கலை அம்சங்களுக்கு புகழ் பெற்றுள்ளது. இதன் உள்ளே ஜைன தீர்த்தங்கரர்களின் மூன்று பிரம்மாண்ட கருங்கல் சிலைகளைக்காணலாம்.
இதே போன்று மஹாமயா கோயிலிலும் மூன்று பெரிய தீர்த்தங்கரர் சிலைகள் காணப்படுகின்றன. மேலும், 24 ஜைன தீர்த்தங்கரர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்ட ஒரு பெரிய கல் வடிவத்தையும் இங்கு பார்க்கலாம்.
தண்டேஷ்வரி கோயில், சண்டி மஹேஷ்வரி கோயில், பஞ்சமுகி மஹாதேவ் கோயில் மற்றும் பஞ்சமுகி ஹனுமான் கோயில் போன்றவையும் இந்த புராதன நகரத்தில் அமைந்திருக்கின்றன.



Click it and Unblock the Notifications