Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரைசன் » வானிலை

ரைசன் வானிலை

அருமையான பருவகாலத்தைக் கொண்டிருக்கும் கோடைகாலங்களில் ரைசனுக்கு வருகை தருவது மிகவும் சிறந்த அனுபவமாக இருக்கும். இந்த நாட்களில் சுற்றுலாப் பயணிகள் ரிவர் ராப்டிங் மற்றும் மலையேற்றம் முதலிய சாகச விளையாட்டுக்களில் ஈடுபட முடியும்.

கோடைகாலம்

ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரையிலும் ரைசனில் கோடைகாலம் நீடித்திருக்கும். இந்த பருவத்தில் அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸாக இருக்கும் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் வரை குறையவும் செய்யும்.

மழைக்காலம்

ரைசனின் மழைக்காலம் ஜுலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதங்களில் முடிவடைகிறது. இந்த நாட்களில் ரைசன் மிதமான மழைப்பொழிவையே பெறுவதால் சுற்றுலாப் பயணிகள் மழைக் காலத்தில் ரைசனுக்கு வருகை தரலாம்.

குளிர்காலம்

25 டிகிரி செல்சியஸ் வெப்பத்துடன் அக்டோபர் மாதம் தொடங்கும் குளிர் காலம் இறுதிக்காலமான மார்ச் மாதத்தில் 0 டிகிரி வரை குறைந்து விடும். இதுமட்டுமல்லாது, குளிர்காலம் நல்ல உச்சத்திலிருக்கும் போது வெப்பநிலை பூஜ்யத்திற்கும் குறைவாகவும் சென்று விடும். எனவே இந்த காலத்தில் சுற்றுலாப்பயணிகள் இங்கு வராமலிருப்பது நலம்.