இராமேஸ்வரத்திற்கு மிகவும் அருகிலிருக்கும் விமான நிலையம் மதுரையில் உள்ளது. சென்னை விமான நிலையத்துடன் நல்ல தொடர்பிலிருக்கும் மதுரை விமான நிலையத்திற்கு தொடர்ச்சியான இடைவெளிகளில் விமானங்கள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரை அல்லது சென்னை விமான நிலையத்திலிருந்து நீங்கள் வெளியில் வந்தவுடன் ஒரு டாக்ஸியை அமர்த்திக் கொண்டு விரைவாக இராமேஸ்வரத்தை உங்களால் அடைய முடியும். இதற்கான டாக்ஸி கட்டணம் இந்திய மதிப்பில் ரூ.3500/- முதல் ரூ.5000/- வரை இருக்கும்.