Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரணக்பூர் » ஈர்க்கும் இடங்கள் » ரணக்பூர் ஜெயின் கோயில்

ரணக்பூர் ஜெயின் கோயில், ரணக்பூர்

10

ரணக்பூர் ஜெயின் கோயில் ஜெயின் இனத்தாருக்கான ஐந்து முக்கியமான புண்ணிய யாத்ரீகத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆரவல்லி மலைத்தொடரின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் ஆதிநாத பஹவானுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

மெலிதான நிறம் கொண்ட பளிங்குக்கற்களால் உருவாக்கப்பட்ட இக்கோயில் மிக அழகான தோற்றத்தைக்கொண்டுள்ளது. சேத் தர்ணா ஷா எனும் ஜைன வணிகர் மற்றும் மேவார் மன்னர் ராணா கும்பா ஆகிய இருவரும் சேர்ந்து இந்த கோயிலை உருவாக்கியதாக நம்பப்படுகிறது.

சாமுகா எனப்படும் பிரதான கோயில் வளாகத்தில் இதர ஜெயின் கோயில்களும் இடம் பெற்றுள்ளன. இக்கோயிலின் அடித்தளப்பகுதி 48000 சதுர அடி பரப்பளவில் பரந்துள்ளது. 80 குமிழ் கோபுர அமைப்புகள், 29 மண்டபங்கள் மற்றும் 1444 தூண்களைக்கொண்ட இந்தக் கோயிலின் நுணுக்கங்கள் அக்கால கலைஞர்களின் கட்டிடக்கலை அறிவை பறைசாற்றுகின்றன.

இந்த தூண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அலங்கார அம்சங்களைகொண்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஒவ்வொரு தூணிலும் விதவிதமான அலங்காரவடிப்புகள் செதுக்கப்பட்டுள்ளன. பர்ஷ்வநாதர் மற்றும் நேமிநாதர் கோயில்கள் பிரதான கோயிலை நோக்கியவாறு அமைந்துள்ளன. கஜுராஹோ சிற்பங்களை ஒத்திருக்கும் சிற்ப வடிப்புகளை பயணிகள் இந்த கோயில்களில் காணலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri