ரத்னகிரிக்கு அருகில் உள்ள அமைதியான இயற்கை எழில் வாய்ந்த ஸ்தலங்களில் இந்த கணேஷ்குலே பீச் என்றழைக்கப்படும் கடற்கரைஸ்தலமும் ஒன்றாகும். இயற்கை ரசிகர்களிடையே இது பிரசித்தமாக அறியப்படுகிறது.
ரத்னகிரியிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கடற்கரைப்பகுதியில் மெய்மறக்க வைக்கும் சூரிய அஸ்தமனக்காட்சியைக் காணலாம்.
இந்த கடற்கரையின் மணல் வெள்ளை நிற பாறைமணலாகவும் கடல் நீர் ஸ்படிகம் போன்று தூய்மையாகவும் காட்சியளிக்கின்றது. அன்புக்குரியவருடன் கை கோர்த்து நடக்கவோ அல்லது ஒரு மாலை நேரத்தை ஏகாந்தமாக கழிக்கவோ ஏற்ற அற்புதமான இயற்கை ஸ்தலம் இந்த கணேஷ்குலே பீச் ஆகும்.



Click it and Unblock the Notifications