மந்தாகினி மற்றும் அலக்நந்தா என்ற இரண்டு ஆறுகள் கூடும் இடத்தில் வீற்றிருக்கும் ருத்ரபிரயாக் கோயில் ஒரு முக்கியமான ஆன்மிக மையமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த கோயில் அழிவு சக்தியின் கடவுளான சிவபெருமானின் ருத்ர அவதாரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிரது.
இசையில் வல்லமை பெற விரும்பி நாரத முனிவர் கடுந்தவம் புரிந்தபோது இந்த இடத்தில் சிவபெருமான் ருத்ர கோலத்தில் எழும்பி வரமளித்ததாக புராணிகங்கள் கூறுகின்றன. அருகிலேயே அமைந்திருக்கும் ஜகதாம்பா கோயிலையும் யாத்ரீகர்கள் தரிசிக்க முடிவது கூடுதல் சிறப்பம்சமாகும்.



Click it and Unblock the Notifications