திரியுக்நாராயண் எனும் இந்த இடம் ருத்ரபிரயாக் பகுதியில் தரிசிக்க வேண்டிய மற்றும் ஒரு புண்ணிய ஸ்தலமாகும். புராணிக நம்பிக்கைகளின்படி இது ஒரு காலத்தில் ஹிம்வத் தேசத்தின் தலைநகராக விளங்கியதாக சொல்லப்படுகிறது.
மேலும், இந்த ஸ்தலத்தில்தான் சத்யுகத்தின்போது சிவபெருமான் பார்வதியை மணம்புரிந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. அந்த திருமணத்தின்போது உருவாக்கப்பட்ட ஹோம குண்டம் இன்ரும் ஹவன் குண்ட் என்ற பெயரில் எரிந்து கொண்டிருப்பதாகவும் ஐதீகம் உள்ளது. இந்த குண்டத்தின் சாம்பல் தம்பதிகளுக்கு திருமண சந்தோஷத்தை அளிப்பதாகவும் நம்பிக்கை உள்ளது.
இந்த ஸ்தலத்துக்கு அருகில் ஒரு விஷ்ணு கோயிலும் அமைந்துள்ளது. இதன் வடிவமைப்பு கேதார்நாத் கோயிலை போன்றே அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்தலத்துக்கு அருகில் உள்ள ருத்ரகுண்ட், விஷ்ணுகுண்ட் மற்றும் பிரம்மாகுண்ட் ஆகிய இடங்களுக்கும் யாத்ரீகர்கள் விஜயம் செய்யலாம்.
இந்த குண்டங்களில் வெளிப்படும் நீர் சிவபெருமானின் நாபியிலிருந்து வெளிப்படுவதாக ஐதீக நம்பிக்கை உள்ளது. பெண்களுக்கு புத்திர பாக்கியத்தை அளிக்கும் புண்ணிய ஸ்தலமாக இந்த இடம் கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications