Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரூப்நகர் » வானிலை

ரூப்நகர் வானிலை

ரூப்நகர் செல்வதற்கு ஏற்ற காலகட்டம் மழைக்காலம் முடிவடைந்து, குளிர்காலம் ஆரம்பிக்கும் காலகட்டமான செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான மாதங்களே ஆகும். இச்சமயத்தின் போது, இங்கு மிகுந்த வெம்மையாகவும் இல்லாமல், மிகுந்த குளிராகவும் இல்லாமல் இதமான வானிலை நிலவும்; அதனால் சுற்றுலாப் பயணிகள் தங்கள் சுற்றுலாவை இனிதாகக் கழிக்கலாம். மேலும், வருடத்தின் இந்த பகுதியில் தாம் இங்கு ஏராளமான திருவிழாக்களும் கொண்டாடப்படுகின்றன. இவ்விழாக்கள் சுற்றுலாப் பயணிகள் இந்நகரின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் திளைப்பதற்கான வாய்ப்பை உருவாக்கித் தருகின்றன.                 

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை): வெப்பமாகவும், வறண்ட வானிலையுடனும் இருக்கும் ரூப்நகரின் கோடைகள் அடிக்கடி வீசும் மணற்புயல்களையும் எதிர்கொள்கின்றன. சில சமயங்களில் கோடைகால வெப்பநிலை சுமார் 45 டிகிரி செல்சியஸ் வரை கூட உயர்ந்து காணப்படும்.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை): ரூப்நகரில் மழைக்காலத்தின் ஆரம்பத்தை குறிக்கும் ஜூன் மாத இறுதி, குறைவான வெப்பநிலைகளுடன் மக்களுக்கு கோடைகால வெப்பத்திலிருந்து ஆசுவாசம் அளிக்கக்கூடியதாக இருக்கும். இந்த மழைக்காலமானது செப்டம்பர் மாத நடுப்பகுதி வரை நீடிக்கும். இக்காலத்தின் போது இந்த நகரம் அதிகரிக்கப்பட்ட ஈரப்பதத்துடன், சராசரியாக சுமார் 775.6 மி.மீ. வரையிலான மழைப்பொழிவைப் பெறும்.

குளிர்காலம்

 (நவம்பர் மாதத்தின் நடுப்பகுதி முதல் பிப்ரவரி மாதம் வரை): ரூப்நகரின் குளிகாலங்கள் சுமார் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடிய வெப்பநிலையுடன் மிகக் குளிராக இருக்கும் தன்மை வாய்ந்தவை. இந்த பருவகாலத்தின் குளிர் நிறைந்த மாதங்கள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களே ஆகும்.