சக்லேஷ்பூரின் முக்கியமான சுற்றுலா அம்சமான இது இங்குள்ள பிஸ்லே வனப்பாதுகாப்பு சரகத்திற்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. மழைக்காடுகளை கொண்ட இந்த வனப்பகுதியில் புலிகள், ராஜ நாகம், மான்கள் மற்றும் பல வகை பறவை இனங்கள் வசிக்கின்றன.
பிஸ்லே குட்டா அல்லது சூர்யபிரகாச மலை என்று அழைக்கப்படுகிற இந்த சிற்றுலாத்தலத்தின் உச்சியிலிருந்து அருகிலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலை, குமார பர்வத மலை, புஷ்பகிரி, தொட்டபெட்டா மற்றும் பட்டபெட்டா போன்ற மலைகளை ரசித்து மகிழலாம்.
இந்த இடத்திற்கு விஜயம் செய்ய உகந்த காலம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களாகும்.



Click it and Unblock the Notifications