Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சேலம் » வானிலை

சேலம் வானிலை

டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் சேலத்தின் வானிலை மிக நன்றாக இருக்கும். குளிர்ச்சியாகவும், ரம்மியமாகவும் இருக்கும் இக்காலகட்டம், இங்கு சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்ற காலகட்டம் ஆகும்.

கோடைகாலம்

சேலத்தில், மார்ச் முதல் ஜீன் மாதங்களில் கோடைகாலம் நிலவுகின்றது. கோடை, மிக வெப்பமானதாகவும், வறண்டதாகவும் இருக்கும். மே மாதத்தில், சராசரி தட்ப வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸில் உட்சபட்ச வெப்பத்துடன் இருக்கும். இக்காலகட்டத்தில் பொழியும் மிகக் குறைந்த மழையானது, இங்கு நிலவும் வெப்பத்திலிருந்து எவ்வித நிவாரணத்தையும் தராது. இது இங்கு செல்வதற்கு ஏற்ற காலகட்டம் அல்ல.

மழைக்காலம்

ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை, இங்கு மழைக்காலமாக உள்ளது. மழை குறைவாக இருப்பினும், வெப்ப வானிலையிலிருந்து சிறிது மாறி ஓரளவு பரவாயில்லாத வானிலை நிலவும். ஆகஸ்டுக்கு பிறகான காலத்தில் தட்ப வெப்பநிலை குறையத் துவங்கும். செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அதிகபட்ச மழை பெய்து, வானிலை மிக ரம்மியமாக இருக்கும்.

குளிர்காலம்

டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இங்கு குளிர்காலமாகும். மழைக்காலத்துக்குப் பின்னான இக்காலத்தில் வானிலை மிகத் தெளிவாகவும், ரம்மியமாகவும் இருக்கும். தட்ப வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸிலிருந்து 30 டிகிரி  செல்சியஸ் வரை வெவ்வேறு அளவுகளில் இருக்கும். இது, இங்கு சென்று வருவதற்கு ஏற்ற காலகட்டமாகும்.