சங்கம் மற்றும் மேகேதாடு பகுதியில் பயணிகள் மறக்கக்கூடாத மற்றொரு விசேஷ அம்சம் இந்த சங்கமேஸ்வரர் கோயிலாகும். காவேரி ஆறும் அர்காவதி ஆறும் கூடும் இடத்திலேயே சிவபெருமானுக்கான இந்தக்கோயில் அமைந்துள்ளது.
பாரம்பரிய மேன்மைக்கு பாடுபட்ட யோகியான பரம குரு மாதா ஜய லட்சுமி இந்தக் கோயிலில் வழிபட்டதாக சொல்லப்படுகிறது. 2007ம் ஆண்டில் அவதூட தட்டா பீடத்தினால் இந்த கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு கோயில் சுற்றுச்சுவர் கிரானைட் ஓடுகளால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. சுவற்றின்மீது கோயில் பாதுகாப்புக்காக கூர் கம்பிகளும் பதிக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications