சங்கமம் - நதிகள் கூடுகின்ற ஸ்தலம்

பெங்களூரிலிருந்து சங்கம் பகுதிக்கு செல்வதற்கான இரண்டு மணி நேரப்பயண அனுபவமே சுற்றுலாப்பயணிகளுக்கு ஆனந்தமான அனுபவமாக இருக்கும். பல வளைவுகளைக் கொண்டுள்ள இந்த பாதையில் தென்படும் இயற்கைக்காட்சிகளும், ஆற்றின் தோற்றமும் மகிழ்வூட்டக்கூடியவை. சங்கம் ஸ்தலத்தில் ஆற்றின் ஆழம் குறைவாகவே இருப்பதால் பயணிகள் ஆற்றுக்குளியல் அனுபவத்தையும் பெறலாம்.

 

இதர பொழுதுபோக்கு அம்சங்கள்

சங்கம் பகுதிக்கு அருகில் மலையேற்றம் போன்ற சாகச பொழுதுபோக்குகளுக்கும் வாய்ப்பிருப்பதோடு, நீச்சல் மற்றும் காவேரி காட்டுயிர் சரணாலயத்தில் மீன்பிடிப்பில் ஈடுபடுதல் போன்றவையும் இங்கு சுற்றுலாப்பயணிகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களாக உள்ளன.

இங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள, காவேரி ஆறு ஒரு ஆழமான பாறைப்பள்ளத்தாக்கு வழியாக ஓடும் இடமான  மேகேதாடு என்ற இடத்துக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம். மேகே என்றால் ஆடு என்பது பொருள்.

ஒரு புலியிடமிருந்து தப்பிக்க ஓடிய வெள்ளாடு ஒன்று இந்த பாறைப்பள்ளத்தாக்கை ஒரே தாவில் தாண்டியதாகவும், தெய்வீக அம்சங்களே அப்படி தாண்டுவதற்கு உதவியிருக்கக்கூடும் என்று பூர்வகுடிகள் நம்பியதால் இன்றும் அந்த இடம் ‘மேகேதாடு’ என்று அழைக்கப்படுகிறது. தமிழில் இந்த இது ‘ஆடு தாண்டும் காவிரி’ என்று பிரசித்தமாக அறியப்படுகிறது.

மழைக்காலம் முடியும் காலத்தில் இந்த மேகேதாடுவுக்கு விஜயம் செய்வது நல்லது. அச்சமயம் காவிரி ஆறு சுழித்துக்கொண்டு நுரை ததும்ப இந்த பாறைப்பள்ளத்தாக்கு வழியே சீறிப்பாயும் அற்புதக்காட்சியை கண்டு ரசிக்கலாம்.

மேகேதாடு பகுதிக்கு செல்வதற்கு அதன் அருகிலுள்ள கனகபுரா பகுதிவரை பெங்களூரிலிருந்து பஸ் வசதிகள் உள்ளன.

Please Wait while comments are loading...