கண்ணுக்கெட்டியவரை கரும்பச்சை வண்ணக் காடுகள், அமைதியாக ஓடும் நீரோடைகள், மென்மையாகக் கிறீச்சிடும் பறவைகள், நீளமான நடைபாதைகள், எங்கு பார்த்தாலும் நிசப்தம், மனதைக் கவரும் அமைதி!..இதுதான் சாபுதாராவிலுள்ள வன்ஸ்தா தேசியப் பூங்கா. வனவிலங்கு ஆர்வலர்களும், அமைதியை விரும்புபவர்களும் ரசிக்கும் இடம் இது. 24 கிலோமீட்டர் நீளத்திற்குப் பரந்து கிடக்கும் இக்காடு முன்னர் வன்ஸ்தா மகாராஜாவின் தனிப்பட்ட சொத்தாக இருந்தது.
சிறிதாக இருந்தாலும் அடர்ந்து காணப்படுவதால், இக்காட்டில், புலி, புள்ளிப்பூனை, பங்கோலின், ராட்சத அணில், சிறுத்தை, மலைப்பாம்பு போன்ற அரியவகை வனவிலங்குகளும் வசிக்கின்றன.
இந்த தேசியப்பூங்காவினை ரசிக்கவிரும்பினால், நீங்கள் முதன்மை வனக் காப்பாளர் அல்லது மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும்.



Click it and Unblock the Notifications