1907-ம் ஆண்டிலிருந்தே இந்திய தொல்பொருள் நிறுவனம் சாரநாத்தில் அகழ்வாய்வுகள் செய்து வருகின்றது. காலப்போக்கில், இந்த இடத்தில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகள் மூலம் பௌத்த மதத்தின் வரலாறு மற்றும் வளர்ச்சி தொடர்பான பல விஷயங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இங்குள்ள முக்கியமான அகழ்வாராய்ச்சி இடத்தில் சில நினைவுச்சின்னங்களும் மற்றும் கட்டிடங்களும் உள்ளன. இந்த பழமையான சின்னங்களில் அடையாளங்கள் மற்றும் குறியீடுகளும் உள்ளன.
இவை புத்தரின் செய்தியை உலகுக்கு சொல்லவும், பரப்பவும் செய்து வருகின்றன. இவற்றில் மிகவும் பழமையான சின்னங்களில் ஒன்றாக கி.மு.250-ம் ஆண்டைச் சேர்ந்த அசோகரின் கற்றூண் உள்ளது.
குப்தர்களின் காலத்தைச் சேர்ந்த தமேக் ஸ்தூபியும் மற்றுமொரு ஆர்வமூட்டக்கூடிய இடமாக உள்ளது. பின்னர், 4 முதல் 12-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த மடாலயங்களும் உள்ளன.
வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பௌத்தமத கல்வியியலறிஞர்கள் ஆகியோருக்கு மிகவும் ஆர்வமூட்டக் கூடிய இடமாக இது விளங்குவதால், அவர்கள் இந்த இடத்திற்கு வந்து இந்த கற்றூணில் இருக்கும் எழுத்துக்களை குறிப்பெடுத்துக் கொண்டும் மற்றும் இந்த மடாலயங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் கட்டப்பட்ட காலகட்டத்தைப் பற்றியும் அறிந்து கொண்டும் செல்கின்றனர்.



Click it and Unblock the Notifications