வாரணாசியிலிருந்து 13 கிமீ தொலைவில், சாரநாத்தில் இருக்கும் சௌகான்டி ஸ்தூபி புத்த மதத்தினரால் மிகவும் மரியாதை செலுத்தப்படும் இடமாகும். இந்த ஸ்தூபி இருக்கும் இடத்தில் புத்தருடன் தொடர்புடைய புதை பொருடகள் மற்றும் அவரால் பயன்படுத்தப் பட்ட பொருட்கள் ஆகியவை உள்ளன.
குப்தர்கள் காலத்தில் கி.மு. 4 முதல் 6-ம்நூற்றாண்டுகளில், சமதளமான கோவிலாக இந்த ஸ்தூபி கட்டப்பட்டுள்ளது. அதுவும், சாரநாத்தில் இருந்து புத்த கயா செல்லும் வழியில் புத்தரை சந்தித்த அவருடைய முதல் சீடர்களின் சந்திப்பினை நினைவு கூறும் விதமாகவே இந்த ஸ்தூபியும் எழுப்பப்பட்டது.
முகலாயப் பேரரசர் ஹுமாயூன் இந்த ஸ்தூபிக்கு வந்த போது, இதில் ஒரு எண்கோண கோபுரம் ஒன்று எழுப்பப்பட்டு, இந்த ஸ்தூபி இன்றிருக்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்டது.
நீங்கள் சௌகான்டி ஸ்தூபிக்கு வரும் வேளைகளில், அருகில் இருக்கும் பார்வையிடங்களான அசோகர் தூண், தமேக் ஸ்தூபி, தர்மஜிகா ஸ்தூபி, தர்மசக்ரா ஸ்தூபி மற்றும் மூலகாந்தா குடி விஹார் ஆகியவற்றிற்கும் சென்று வரலாம்.



Click it and Unblock the Notifications