சாரநாத்தில் உள்ள மான் பூங்காவில் புத்தர் தனது முதல் போதனையை மக்களுக்கு அறிவித்தால் அது பௌத்தர்களுக்கு மிகவும் முக்கியமான இடமாக உள்ளது.
கொன்டன்னா என்ற முதல் அரிஹந்த் ஞானம் பெற்றதாலும், அவர் முதல் புத்த சங்கத்தை இவ்விடத்தில் உருவாக்கியதாலும் இந்த இடத்தின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.
நீங்கள் மான் பூங்காவிற்கு செல்லும் போது, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சிறு கிராமமான சிங்பூர் என்ற கிராமத்திற்கும் சென்று வாருங்கள். இந்த கிராமத்தில் தான் சமணர்களில் 11-வது தீர்த்தங்கரராக கருதப்படும் ஸ்ரேயான்சனத் பிறந்தார்.
அவருக்காக இங்கே ஒரு கோவிலும் கட்டப்பட்டுள்ளது மற்றும் சமணர்களுக்கு முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றாகவும இது விளங்குகிறது.



Click it and Unblock the Notifications