வாரணாசியிலிருந்து 13 கிமீ தொலைவில் இருக்கும் சாரநாத்தில் இந்த மாபெரும் ஸ்தூபி அமைந்துள்ளது. கி.மு.249-ல் அசோகரால் கட்டப்பட்ட இந்த ஸ்தூபி மற்றும் வேறு சில நினைவுச் சின்னங்களை புனரமைக்கும் பொருட்டாக இன்று இந்த இடத்தில் உள்ள ஸ்தூபி கி.பி.500-ல் கட்டப்பட்டது.
உண்மையில், பேரரசருடைய ஆட்சிக்காலத்தில் பல்வேறு ஸ்தூபிகள் உருவாக்கப்பட்டன. இந்த ஸ்தூபிகளில் புத்தருடைய வார்த்தைகள் மற்றும் அவருடைய சேகரிக்கப்பட்ட எலும்புகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. மேலும், செதுக்கப்பட்ட அசோகர் தூண் ஒன்றும் இந்த இடத்தில் உள்ளது.
மான் பூங்காவில் தமேக் ஸ்தூபி உள்ள இடம் தான் புத்தர் ஞானம் பெற்ற பிறகு தனது முதல் போதனைகளை மக்களுக்கு வெளியிட்ட இடமாக குறிப்பிடப்படுகிறது. இந்த இடத்தில் தான் எண்-வழி மார்க்கத்தால் மட்டுமே நிர்வாணம் அல்லது ஞானம் அடைய முடியும் என்று புத்தர் குறிப்பிட்டார்.
இந்த ஸ்தூபியை ஆறு முறை விரிவுபடுத்தியிருந்தாலும், அதன் மேற்பகுதி இன்னும் முழுமையடையாததாகவே உள்ளது. 5-ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை புரிந்த சீனப்பயணியான யுவான் சுவாங்கின் எழுத்துக்களின் படி, இந்த இடத்தில சுமர் 1500 பௌத்த துறவிகள் இருந்ததாகவும் மற்றும் முதன்மை ஸ்தூபி சுமார் 300 அடி உயரம் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications