இந்த இடத்தில் தான் கௌதம புத்தர் தர்ம சக்கரத்தை சுழற்றிடவும் மற்றும் நான்கு உண்மைகள் மற்றும் எண்-வழி மார்க்கங்களை வரையறை செய்தார். சாராநத்தின் இந்த இடத்திலிருந்து தான் புத்த மதம் வேரூன்றி, பின்னர் உலகெங்கும் பரவத் தொடங்கியது.
எனவே தான் சாரநாத்திற்கு திபெத், சீனா, ஜப்பான் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து புனிதப் பயணிகள் மற்றும் பௌத்த மத கல்வியாளர்கள் வருவது ஆச்சரியமாகப் பார்க்கப்படுவதில்லை.
இந்த மக்கள் தங்களுடைய கோவில்களையும் மற்றும் கல்வி மையங்களையும் இந்த கிராமத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். அந்த வகையில் த்ராங்கு ரின்போசேயினால் உருவாக்கப்பட்ட ஒரு கல்வி மையமாக திபெத்திய மடாலயம் அல்லது வஜ்ரா வித்யா நிலையம் விளங்கி வருகிறது.
புத்தர் தனது முதல் போதனையை வெளிப்படுத்திய மான் பூங்காவிற்கு அருகில் இந்த கல்வி மையம் அமைந்துள்ளது.
சாரநாத்திலேயே மிகப்பெரியதாக உள்ள காக்யு திபெத்திய மடாலயம், புத்த கயாவில் உள்ள நாளந்தா மடாலய கல்வி நிறுவனத்தைப் போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த நிலையத்தில் 15 துறவிகள் மற்றும் 4 பெண் துறவிகள் படிப்பதற்கான இருப்பிடமாகவும் உள்ளது.



Click it and Unblock the Notifications