சாரநாத் ஒரு மிகச்சிறந்த பௌத்த மத புனிதத்தலமாக இருப்பதால், ஜப்பான், தாய்லாந்து மற்றும் சீனா போன்ற உலக நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலான மக்களுக்கான கோவில்கள் சாரநாத்தில் கட்டப்பட்டுள்ளன.
அந்த வகையில் 'தாய் கோவில்' தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களால் கட்டப்பட்டு, தாய்லாந்து நாட்டின் மாறுபட்ட கட்டிடக்கலையைச் சேர்ந்ததாக உள்ளது.
மிகவும் வண்ணமயமாக இருக்கும் இந்த கோவிலை, தாய் பௌத்த துறவிகள் பராமரித்து வருகின்றனர். அழகான தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோவில், அமைதி மற்றும் நிம்மதியின் இருப்பிடமாக விளங்குகிறது.



Click it and Unblock the Notifications