சாத்தால் மிஷன் எஸ்டேட் மற்றும் மெத்தோடிஸ்ட் ஆஷ்ரம் எனும் கிறித்துவ பிரச்சார வளாகம் 1930ம் ஆண்டில் ஈ.ஸ்டான்லி ஜோன்ஸ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதாகும்.
இவர் மஹாத்மா காந்தி மற்றும் மார்ட்டின் லூதர் கிங் போன்ற தலைவர்களின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் தேயிலைத்தோட்டம் அமைந்திருந்த இடத்தில் இந்த ஆசிரமம் கட்டப்பட்டிருக்கிறது.
டென்சிங் நார்கே’யுடன் சேர்ந்த எவெரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஏறியஎர்ல் டென்மென் எனும் மலையேறி இங்கு நெடுங்காலம் வசித்துள்ளார்.
இந்த ஆசிரம வளாகத்தில் எழுப்பப்பட்டிருக்கும் செயிண்ட் ஜான் தேவாலயம் காலனிய காலத்திய கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கிறது. வனப்பிரஸ்தா ஆசிரமம் எனும் பெயருடன் இந்த ஆசிரமம் குமாவூங் பகுதியில் கிறித்துவ மதத்தை பரப்பி வந்திருக்கிறது.



Click it and Unblock the Notifications