சேவாகிராம் நகரத்தின் குன்றா புகழுக்கு மூல முதல் காரணமாக விளங்கி வருவது சேவாகிராம் ஆஸ்ரமம் தான் என்று சொல்வதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.
இந்த சிறிய நகரத்துக்கு 1936-ஆம் ஆண்டு வந்த காந்தியடிகள் 1948 வரை மொத்தம் 13 ஆண்டுகள், தன் வாழ்நாள் முழுமையும் இங்குதான் வாழ்ந்தார்.1930-ஆம் ஆண்டு சபர்மதி ஆஸ்ரமத்திலிருந்து, தண்டி வரை பாத யாத்திரையை தொடங்கிய காந்தியடிகள், இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கும் வரை சபர்மதியில் கால் வைப்பதில்லை என்று சபதம் செய்தார்.
அப்போது தண்டி யாத்திரையில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையான காந்தியடிகள், சபர்மதி செல்லாமல் சேவாகிராம் வந்து ஆஸ்ரமம் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. அப்படித்தான் இந்த சேவாகிராம் ஆஸ்ரமமும் தொடங்கப்பட்டது.
சேவாகிராம் ஆஸ்ரமம் நிறைய பகுதிகளை கொண்டது. இங்குள்ள ஆதி நிவாஸ், வழிபாட்டுத் திடல், பா குடில், பாபு குடில் மற்றும் அக்ரி நிவாஸ் போன்ற பகுதிகள் காந்தியடிகளாலும், கஸ்தூரிபாயினாலும் அதிகமாக பயன்படுத்தப் பட்ட இடங்கள்.
மேலும், பாபுவின் சமையலறை, அத்ய ஆதி நிவாஸ், மகாதேவ் குடில், கிஷோர் நிவாஸ், பர்ச்சுரே குடில், ரஸ்த்தம் பவன் மற்றும் யாத்ரி நிவாஸ் ஆகியவை ஆஸ்ரமத்தின் இதர பகுதிகளாகும்.
இதில் யாத்ரி நிவாஸ் மட்டும் பயணிகளுக்கென்றே பிரத்தியேகமாக 1982-ஆம் ஆண்டு இந்திய அரசால் கட்டப்பட்ட விருந்தினர் இல்லமாகும்.



Click it and Unblock the Notifications