டான் பாஸ்கோ மையம் பல வகையான கலாச்சாரங்களை எடுத்துரைக்கும் வண்ணம் ஆசியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகமாக திகழ்கிறது. பயணிகள் பலவகையான கலைப்பொருட்கள், கைவினைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் அரிய புகைப்படங்கள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
சலேசியன் சங்கத்தால் நடத்தப்படும் இந்த அருங்காட்சியகம் புனித இருதய தேவாலய வளாகத்தின் உள்ளேயே இருக்கிறது. உள்ளூர் மக்களால் டான் பாஸ்கோ மியுசியம் என அழைக்கபப்டும் இதில் 17காட்சியகங்கள் உள்ளன.
ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஏற்றவாறு இந்த காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயுதங்கள், உடைகள், ஆபரணங்கள், கூடைகள், மொழிகள் என ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாக பயணிகள் தெரிந்துகொள்ளலாம்.



Click it and Unblock the Notifications