நகரின் மையப்பகுதியில் இருந்து 3கிமீ தொலைவில் உள்ள இந்த மைதானத்திற்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். கோல்ஃப் லின்க்ஸ் என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்த இடம் 1898ல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.
பைன் மரங்களுக்கு இடையே இருக்கும் இந்த மைதானம் கடல் மட்டத்தில் இருந்து 5200அடி உயரத்தில் உள்ளது. ஆரம்பத்தில் ஒன்பது குழி கோல்ஃப் மைதானமாக கட்டப்பட்ட இது பின்னர் 1924ல் 18குழி மைதானமாக மாற்றப்பட்டது.
ஷில்லாங் கோல்ஃப் பயிற்சி மையம் ஆசியாவின் இரண்டாவது பெரிய கோல்ஃப் மையம் என்ற பெருமையும் கொண்டுள்ளது. பல வீரர்கள் நாடெங்கிலும் இருந்து இங்கு வருகிறார்கள். அசாமிய கட்டிடக்கலையின் படி கட்டப்பட்டுள்ள மையத்தைக் காணவே ஏராளமான பயணிகள் இங்கு வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications