இந்த நீர்வீழ்ச்சி ஷில்லாங் நீர்வீழ்ச்சிகளிலேயே மிகவும் அகலமானதாகும். மெதுவாக மலைகளில் இருந்து வரும்ஜ் நீர் மெல்ல வேகமெடுத்து கீழே வேகமாக வந்து பாறைகளில் முட்டுகிறது. முட்டுகையில் கழுகைப் போல தோற்றமளிப்பதால் இந்த நீர்வீழ்ச்சி இப்பெயர் பெற்றது.
உள்ளூர் பூர்வகுடிகள் இந்நீர்வீழ்ச்சியை உர்கலியர் நீர்வீழ்ச்சி என்கிறார்கள். வழுக்கும் தன்மையுடன் இருப்பதால் இந்த நீர்வீழ்ச்சி ஆபத்தானதாகவே இருக்கிறது.
சதி நீர்வீழ்ச்சி என்றும் வழங்கப்படும் இது சில ஆண்டுகள் முன்பு வரை சாலை வசதி இல்லாததால் புகழடையவில்லை. எனினும் இப்போது சுற்றுலாத்துறை சகலவசதிகளையும் செய்துவிட்டதால் பிரபலமடைந்துவிட்டது.



Click it and Unblock the Notifications