கோயில்களும் வரலாற்றுச்சின்னங்களும் ஏராளம் நிரம்பியுள்ள ஷிவ்புரி நகரத்தில் வீற்றிருக்கும் மற்றும் ஒரு முக்கியமான கோயில் இந்த பங்கங்கா என்றழைக்கப்படும் புராதன கோயிலாகும்.
ஷிவ்புரி நகரத்தில் எந்த சாலையில் சிறிது தூரம் நடந்தாலும் 7ம் நூற்றாண்டுக்குரிய ஒரு புராதன கோயிலை தரிசிக்க முடியும் என்பது ஒரு விசேஷ அம்சம். கோயில் இல்லாவிட்டாலும் கோயில் இருந்த இடம் இது எனும் தகவலும் கிடைக்கக்கூடும்.
இந்த பங்கங்கா கோயிலைச்சுற்றி 52 புனித தீர்த்தக்குளங்கள் அமைந்திருக்கின்றன. இந்த கோயில் புராணிக முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. அம்புப்படுக்கையில் வீற்றிருந்த பீஷ்மரின் தாகத்தை தீர்ப்பதற்காக அர்ஜுனன் எய்த அம்பு இந்த இடத்தில்தான் பூமியை துளைத்ததாக சொல்லப்படுகிறது.
அம்பு துளைத்த இடத்திலிருந்து கங்கை நீர் பீறிட்டு பீஷ்மரின் தாகத்தை தணித்ததாக மஹாபாரதத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications