படையா குண்ட் என்றழைக்கப்படும் இந்த தீர்த்தம் மருத்துவ குணங்கள் நிறைந்த நீருற்றை கொண்டிருக்கிறது. குவாலியர் நகரத்திலிருந்து 112 கி.மீ தூரத்தில் உள்ள இந்த சுற்றுலாத்தலத்தில் மத்தியப்பிரதேச சுற்றுலா வளர்ச்சித்துறை பயணிகளுக்கு தேவையான எல்லா அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஷிவ்புரிக்கு வெகு அருகிலேயே இந்த படையா குண்ட் நீரூற்று அமைந்துள்ளது. இதில் வெளிப்படும் நீரில் கனிமங்கள் அதிக அளவில் நிரம்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
புராதன மருத்துவ பாரம்பரியம் மற்றும் நவீன ஆவிக்குளியல் முறைகளில் இயற்கை நீரூற்றில் வெளிப்படும் நீருக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ரம்மியமான இயற்கை சூழலுடன் இந்த தீர்த்த ஸ்தலம் காட்சியளிக்கிறது. மழைக்காலத்தில் இந்த படையா குண்ட் தீர்த்தத்துக்கு விஜயம் செய்வது உகந்தது.



Click it and Unblock the Notifications