Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷிவ்புரி » ஈர்க்கும் இடங்கள் » பூரா கோன் நீர்வீழ்ச்சி

பூரா கோன் நீர்வீழ்ச்சி, ஷிவ்புரி

23

ஷிவ்புரி சுற்றுலாப்பயணத்தை ஒரு இனிமையான அனுபவமாக மாற்றும் மூன்று நீர்வீழ்ச்சிகளில் இந்த பூரா கோன் நீர்வீழ்ச்சியும் ஒன்று. பொழுதுபோக்கு சுற்றுலாவின்போது நீர் சம்பந்தப்பட்ட ஸ்தலங்கள் யாவுமே மனதுக்கு உற்சாகமூட்டுவதாக அமையும் என்பது ஒரு வெளிப்படையான உண்மை.

நீர்த்தேக்க ஸ்தலங்களுக்கு விஜயம் செய்து விட்டு திரும்பும் சுற்றுலாப்பயணிகள் ஒவ்வொருமே இந்த உண்மையை வெவ்வேறு வார்த்தைகளின் மூலமாக உறுதிப்படுத்துகின்றனர்.

நீரின் இரைச்சலும் குளுமையும் மனதை சாந்திப்படுத்தி லேசாக்கும் சக்தி கொண்டவை எனும் உண்மையை அனுவித்து பார்த்து மட்டுமே புரிந்து கொள்ள முடியுமே தவிர வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

இந்த பூரா கோன் நீர்வீழ்ச்சி ஸ்தலமும் பயணிகளை வசீகரிக்கும் எழில் அம்சங்களுடன் காட்சியளிக்கிறது. 25 மீட்டர் உயரத்திலிருந்து பாறை மடிப்புகளின்வழியாக நீர் புரண்டு விழும் காட்சியானது நகரச்சந்தடியையே பார்த்து களைப்படைந்த கண்களுக்கு இதமான மருந்தாக மாறுகிறது.

சாகசப்பயணிகள் விரும்பினால் இந்த நீர்வீழ்ச்சி குளத்தில் நீச்சலிலும் ஈடுபடலாம். நீர்வீழ்ச்சி ஸ்தலத்துக்கு அருகிலேயே ஒரு சிவன் கோயிலும் அமைந்திருக்கிறது. இயற்கை தரிசித்த கையோடு இறைவனையும் தரிசித்து தூய்மையான மனதுடன் பயணிகள் திரும்பலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed