உள்ளூர் மக்களால் ‘பேலஸ்’ என்று பெருமையோடு அழைக்கப்படும் மாதவ் விலாஸ் அரண்மனை அந்த பெயருக்கேற்ற கம்பீரத்தோடு காட்சியளிக்கிறது. அழகிய காட்சிக்கோபுரங்கள், பல மேற்கூரைத்தளங்கள் மற்றும் வெண்பளிங்குக்கற்கள் வேயப்பட்ட தரைகள் போன்ற அம்சங்களை இது கொண்டிருக்கிறது.
வெளிர் சிவப்பு நிறத்தில் தோற்றமளிக்கும் இந்த அரண்மனை சுற்றிலுமுள்ள கட்டிடங்களிலிருந்தும் வேறுபட்டு காட்சியளிக்கிறது. வரலாற்றுக்கால அரண்மனைகளைப்போல் அல்லாது காலனிய காலத்து கட்டிடக்கலை அம்சங்களுடன் இது நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
சிந்தியா ராஜவம்சத்தினரின் கோடைக்கால வசிப்பிடமாக இந்த அரண்மனை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அரண்மனையின் காட்சி கோபுரங்களிலிருந்து இன்றும் மாதவ் தேசியப்பூங்காப்பகுதியை பார்த்து ரசிக்க முடிவது இதன் சிறப்பம்சமாகும்.
தற்சமயம் இந்த அரண்மனை இந்திய அரசின் உளவுத்துறை பிரிவின் பயிற்சி மையமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு வரலாற்று கட்டிடம் இத்தகைய அரசாங்க பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டிருப்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.



Click it and Unblock the Notifications