மோகினி பிக்-அப் அணை எனப்படும் இந்த நீர்த்தேக்கம் ஷிவ்புரி சுற்றுலாப்பயணத்தில் விஜயம் செய்ய வேண்டிய மற்றும் ஒரு ரம்மியமான சிற்றுலாத்தலமாகும். ஷிவ்புரி பிரதேசத்தில் உள்ள வரலாற்றுத்தலங்கள், இயற்கை பூங்காக்கள் மற்றும் கோயில்கள் போன்றவற்றின் மத்தியில் இந்த மோகினி பிக்-அப் அணை ஒரு சாந்தமான பிக்னிக் ஸ்தலமாக பிரசித்தி பெற்றிருக்கிறது.
ஷிவ்புரி நகரிலிருந்து 50 கி.மீ தொலைவில் ஷிவ்புரி – நர்வார் சாலையில் இந்த அழகான சிற்றுலாத்தலம் அமைந்திருக்கிறது. இந்த அணைக்கட்டுமானம் இப்பிரதேசத்தின் நீர்ப்பாசன தேவைகளுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது.
அழகிய புல்வெளிப்பிரதேசம் மற்றும் ஒரு கண்ணாடி மாளிகை அமைப்பு போன்றவை இந்த அணைப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவரும் அம்சங்களாகும்.
இந்த கண்ணாடி மாளிகையிலிருந்து பயணிகள் சுற்றிலும் காணப்படும் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிக்கலாம். மழைக்காலத்தில் நீர்த்தேக்கம் நிரம்பி பிரம்மாண்டமாக காட்சியளிப்பதால் அக்காலத்தில் இந்த அணைப்பகுதிக்கு விஜயம் செய்வது சிறந்தது.



Click it and Unblock the Notifications