ஹிந்துக்களின் புனித நீராட்டுதுறையாக பிரசித்தி பெற்றிருக்கும் இந்த பனிஹார் ஸ்தலம் குவாலியர் நகரத்திலிருந்து ஷிவ்புரி நகரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. உள்ளூர் மக்கள் மற்றும் இந்தியா முழுவதிலிருந்தும் வருகை தரும் யாத்ரீகர்கள் ஆகியோர் அதிக எண்ணிக்கையில் இங்கு புனித நீராடலில் ஈடுபடுகின்றனர்.
இந்த நீராடலின்போது ஆன்மாவும் சுத்திகரிக்கப்படுவதாக பக்தர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. இந்த பனிஹார் ஸ்தலத்திற்கு அருகில் உள்ள பச்ராய், ஷீ சாந்திநாத் திகம்பர் ஜெயின் அதிஷய ஷேத்திரம் மற்றும் ஷீ பச்ராய் தீர்த்தம் போன்ற இடங்களுக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம்.
இந்த ஆன்மீக ஸ்தலங்களை தரிசிக்கும்போது உள்ளூர் உணவு வகைகளை ருசித்துப்பார்க்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. குவாலியரின் எல்லைப்பகுதியில் உள்ள சிர்சோத் எனும் கிராமத்தில் தனித்தன்மையோடு தயாரிக்கப்படும் கீர் இனிப்பு வகையை மறக்காமல் சுவைத்துப்பார்ப்பது நல்லது.



Click it and Unblock the Notifications