சாக்யா சாகர் ஏரி மற்றும் மாதவ் சாகர் ஏரி எனப்படும் இரண்டு நீர்த்தேக்கங்களும் 1918ம் ஆண்டில் மேனியர் ஆற்றில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை மாதவ் தேசியப்பூங்காவிற்கு அருகிலேயே அமைந்துள்ளன.
பூங்காவின் உயிரியல் சமநிலையை பேணுவதில் இந்த இரண்டு ஏரிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பறவைகள் மற்றும் ஊர்வன விலங்குகள் இணக்கமுடன் இந்த வனப்பகுதியில் உயிர் வாழ்வதற்கு இந்த ஏரிகள் அடிப்படை ஆதாரமாக திகழ்கின்றன.
‘செயிலிங் கிளப்’ எனப்படும் படகுத்துறை ஒன்றும் சாக்யா சாகர் ஏரியில் அமைக்கப்பட்டிருக்கிறது. பயணிகள் படகுச்சவாரியில் ஈடுபடுதற்கான வசதிகள் இந்த படகுத்துறையில் செய்யப்பட்டிருக்கின்றன.
காட்டுயிர் ரசிகர்கள் மற்றும் புகைப்பட ஆர்வலர்கள் எதிர்பார்க்கும் எல்லா அம்சங்களும் இந்த ஏரிப்பகுதியில் நிரம்பியுள்ளன. படகில் பயணம் செய்தபடி சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பது பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது.
அதிகாலை நேரங்களில் பயணிகள் இங்கு உடும்பு, மலைப்பாம்பு மற்றும் சதுப்பு நில முதலை போன்றவற்றை பார்க்கவும் வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications