Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷிவ்புரி » ஈர்க்கும் இடங்கள் » ஷிவ்புரி டிஸ்டிரிக்ட் மியூசியம்

ஷிவ்புரி டிஸ்டிரிக்ட் மியூசியம், ஷிவ்புரி

23

முன்னோர்களின் வரலாற்று கால உன்னதங்கள் மற்றும் சான்றுகள் போன்றவற்றை பாதுகாத்து காட்சிப்படுத்தும் நோக்கத்துடன் இந்த ஷிவ்புரி டிஸ்டிரிக்ட் மியூசியம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஷிவ்புரி நகரத்தின் ஆழமான வரலாற்றுப்பின்னணி குறித்து தெரிந்து கொள்ள இங்குள்ள கோயில்கள் மற்றும் வரலாற்றுச்சின்னங்களுக்கு விஜயம் செய்தால் மட்டும் போதாது.

இந்த அருங்காட்சியகத்துக்கும் ஒரு முறை விஜயம் செய்தால்தான் இந்த மண்ணின் வரலாற்று செழிப்பு குறித்து முழுதும் தெரிந்துகொள்ள முடியும். ஹிந்து புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்த ஷிவ்புரி  நகரம் வரலாற்று முக்கியத்துவம் மட்டுமல்லாமல் புராணிக ஐதீக முக்கியத்துவத்தையும்  கொண்டிருக்கிறது.

தாத்யா தோப்பே நினைவுச்சின்னம் மற்றும் 6 ம் நூற்றாண்டைச்சேர்ந்த புராதன கோயில்கள் இந்த நகரத்தை பிரசித்தமாக அறியச்செய்துள்ளன. ஒரு தொல்லியல் அருங்காட்சியகமாக காணப்படும் இந்த ஷிவ்புரி டிஸ்டிரிக்ட் மியூசியத்தில் நூற்றாண்டுகள் கடந்த வரலாற்றுச்சான்றுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

வரலாற்றுத்தகவல்கள், தொல்லியல் சார் தகவல்கள் போன்ற துறைகளுக்குரிய நூல்களைக்கொண்ட ஒரு நூலகமும் இந்த அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொதுப்பிரிவை சேர்ந்த நூல்களும் இந்த நூலகத்தில் உள்ளன. கடந்துபோன வரலாற்றின் பதிவுச்சான்றுகளாக பல்வேறு ஓவியங்கள், சிலைகள் மற்றும் நாணயச்சேகரிப்புகளை இந்த அருங்காட்சியகத்தில் பயணிகள் பார்க்கலாம். இவை யாவும் மராத்தா மற்றும் ராஜபுதன பாரம்பரியத்தை சேர்ந்தவையாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Sep,Wed
Check Out
10 Sep,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu