ஷிவ்புரி நகரத்தில் விஷ்ணுவுக்காக அமைக்கப்பட்டிருக்கும் கோயில் இந்த சித்தேஸ்வரா கோயில் ஆகும். இயற்கை வளம் நிரம்பப்பெற்றிருக்கும் ஷிவ்புரி பகுதியில் வழிபாட்டுத்தலங்களும் ஏராளம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பார்வையில் இந்த கோயில்கள் எல்லாமே ஒரே மாதிரியாக தோற்றமளிப்பது போல் காட்சியளித்தாலும் கூர்ந்து நோக்கினால் ஒவ்வொன்றும் தனித்தன்மையான கலையம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருப்பது புலனாகும். புராதனமான இந்த சித்தேஸ்வரா கோயில் மஹாவிஷ்ணுவின் அவதாரத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
அக்காலத்தில் இந்தியாவில் பரவலாக பின்பற்றப்பட்ட கோயிற்கலை பாணியில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. விஷ்ணு, சிவன், விநாயகர், ராமர், கிருஷ்னர், பார்வதி மற்றும் லட்சுமி போன்ற கடவுள்களின் அற்புதமான சிலைகளை இந்த கோயிலில் தரிசிக்கலாம்.



Click it and Unblock the Notifications