ஸ்ரீ சாந்திநாத் திகம்பர் ஜெயின் அதிசய ஷேத்ரா எனும் இந்த ஜைன யாத்ரீக ஸ்தலம் ஷிவ்புரி நகரிலிருந்து 13 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. இங்குள்ள கோயில் 800 வருடங்கள் பழமையுடையதாக கருதப்படுகிறது.
சேசாய் எனும் சிறிய நகரத்தில் அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு ஆக்ரா-மும்பை சாலை வழியாக எளிதில் சென்றடையலாம். ஜைன மார்க்கத்தை சேர்ந்தவர்களின் ஒரு முக்கிய வழிபாட்டுத்தலமாக இந்த ஸ்ரீ சாந்திநாத் திகம்பர் ஜெயின் அதிசய ஷேத்ரா புகழ் பெற்றுள்ளது.
இந்த கோயிலின் முக்கியமான சிறப்பம்சமாக இதன் வளாகத்தின் உள்ளேயே ஒரு ஜைன மத அருங்காட்சியகம் அமைந்திருக்கிறது. புராதன கால ஜைன சிலைகள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
மேலும் கோயிலின் கருவறையில் 15 அடி உயர பிரம்மாண்ட சிலையும் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த சிலை எட்டு உலோகங்கள் சேர்க்கப்பட்ட கலவையால் உருவாக்கப்பட்டதாகும்.



Click it and Unblock the Notifications