சுல்தான் கர் நீர்வீழ்ச்சி ஷிவ்புரி நகரத்திலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ளது. ரம்மியமான இந்த நீர்வீழ்ச்சி இயற்கை செழிப்பு நிறைந்த ஒரு சூழலின் நடுவே வீற்றுள்ளது. மலைகளில் புரண்டு ஓடி வரும் பார்வதி ஆற்றில் இந்த சுல்தான் கர் நீர்வீழ்ச்சி உருவாகியுள்ளது.
மழைக்காலமே இந்த நீர்வீழ்ச்சியின் அழகை முழுமையாக ரசிக்க ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் ஆற்றில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருவதால் செங்குத்தான மலைப்பாறைகளில் வேகத்துடன் சரியும் நீர்வீழ்ச்சி பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
மேலும் நீர்வீழ்ச்சியை ஒட்டி அமைந்திருக்கும் ரம்மியமான இயற்கைக்காட்சிகள் கண்களுக்கு விருந்தாக தோற்றமளிக்கின்றன. இந்த நீர்வீழ்ச்சிப்பகுதியில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனக்காட்சிகள் அற்புதமாக தோற்றமளிப்பதால் புகைப்பட ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ரசிகர்கள் ஆவலுடன் அதிக எண்ணிக்கையில் விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications