ஷிவ்புரி நகரத்திலிருந்து 75 கி.மீ தூரத்தில் தேராஹி எனும் நகரத்தில் இந்த தேராஹி கோயில் அமைந்திருக்கிறது. தேராஹி நகரத்தின் வரலாற்றுப்பெயர் தேராம்பி என்பதாகும்.
இங்குள்ள சிவன் கோயில் ஆதி காலத்திய பிரதிஹரா கோயிற்கலை பாணியில் கட்டப்பட்டிருக்கிறது. அளவில் சிறியதாக காட்சியளிக்கும் இக்கோயில் உள்ளூர் மொழியில் மொகஜ்மாதா கோயில் என்று அழைக்கப்படுகிறது.
சிறியதாக இருப்பினும் இக்கோயிலின் நுழைவாயில் தோரண அமைப்பு நுணுக்கமான அலங்கார அமைப்புகளுடன் காட்சியளிக்கிறது. கோயிலின் கர்ப்பக்கிருகம் வித்தியாசமான சிலைகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.
இங்கு சாமுண்டி தெய்வம் தனது ஆண் துணையுடன் சிருங்கார கோலத்தில் வீற்றிருக்கும் காட்சியை காண முடிகிறது. திக்பாலகர்கள் மற்றும் வியாலா சிலைகளும் இக்கோயிலில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இக்கோயில் சிவப்பு பாறைகளால் கிழக்கு நோக்கியதாக கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயிலின் கருவறையில் உள்ள சிலைகள் பின்னாளில் சேர்க்கப்பட்டவையே தவிர ஆதி நிர்மாணம் அல்ல என்றும் ஒரு சர்ச்சை நிலவி வருகிறது



Click it and Unblock the Notifications