கடல் மட்டத்திலிருந்து 3540 மீ உயரத்தில் இந்த ரகுபுர் கோட்டை வீற்றிருக்கிறது. ஷோஜா நகரத்தில் உள்ள ஒரே வரலாற்று சின்னம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அழகிய கோட்டை வளாகத்தில் பல கால்வாய்களும் மீன் தடாகங்களும் காணப்படுகின்றன.
குண்டுத்துளைப்பினால் உருவான பல துளைகளை பயணிகள் இந்த கோட்டையின் சுவர்களில் பார்க்கலாம். ரம்மியமான எழிற்பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்த கோட்டை ஸ்தலத்திலிருந்து தீர்த்தன் பள்ளத்தாக்குப்பகுதி மற்றும் இமயமலைத்தொடரின் அழகை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.
மேலும் மலைச்சரிவுகளில் மேய்ப்பர்கள் கால்நடைகளை மேய்க்கும் காட்சியையும் இந்த இடத்திலிருந்து பயணிகள் பார்க்க முடியும்.



Click it and Unblock the Notifications