மும்பை - வடோதரா - டெல்லி தேசிய நெடுஞ்சாலை சில்வாசா நகரத்திற்கான முக்கிய சாலை இணைப்பாக அமைந்திருக்கிறது. மும்பைக்கும் சில்வாஸாவிற்கு இடையே உள்ள தூரம் சுமார் 180 கி.மீ ஆகும். மும்பை (போரிவிலி), சூரத், அஹ்மதாபாத், உதய்பூர், நாசிக் மற்றும் ஷிர்டி போன்ற இடங்களிலிருந்து சில்வாஸாவிற்கு நல்ல முறையில் பேருந்துச்சேவைகள் இயக்கப்படுகின்றன.