Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சில்வாஸா » வானிலை

சில்வாஸா வானிலை

கோடைகாலம்

மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை இங்கு கோடைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் இப்பகுதி அதிக வெப்பத்துடன் காணப்படுகிறது. இக்காலத்தில் 18°C  துவங்கி அதிகபட்சம் 39°C  வரை வெப்பநிலை நிலவுகிறது.

மழைக்காலம்

ஜுன் மாதம் முதல் செப்டம்பர் வரை இங்கு மழைக்காலம் நிலவுகிறது. பொசுக்கும் கோடை வெப்பத்திலிருந்து இப்பகுதியை மழைக்காலம் விடுவிக்கிறது. இருப்பினும் சூழலில் ஈரப்பதம் அதிகமாகவே காணப்படும்.

குளிர்காலம்

நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இப்பகுதியில் குளிர்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை 10 டிகிரி வரை குறைந்து காணப்படுவதால் இதுவே சில்வாஸாவிற்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாகும்.