சிந்துதுர்க் பகுதியின் பசுமையான மலைகளுக்கும் குன்றுகளுக்கும் இடையில் அமைந்துள்ள வெங்கர்லா நகரத்தின் அருகில் உள்ள மோச்சேமாத் கிராமத்தில் இந்த கடற்கரை உள்ளது.
இங்கு கடலோடு ஒட்டி மைல்கள் தூரத்துக்கு கிடக்கும் தங்க நிற மணல் கடற்கரை காணப்படுகிறது. கடற்கரையை ஒட்டி சுரு மரங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இங்கும் கடல் நீரானது மாசற்ற தூய்மையுடன் தெளிவாக காட்சியளிப்பதுடன் அரபிக்கடலின் அமைதியான அலைகள் ஓயாது வீசிக்கொன்டிருக்கின்றன.இங்கு கடற்கரையில் நீந்தி மகிழ வசதியாக சந்தடிகள் ஏதுமற்று அமைதியான ஏகாந்தத்துடன் காட்சியளிக்கிறது.



Click it and Unblock the Notifications