Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோம்நாத் » வானிலை

சோம்நாத் வானிலை

கோடைகாலம்

இப்பகுதியில் கோடைகாலம், மார்ச் மாதம் ஆரம்பித்து ஜூன் மாதம் வரையில் நீடிக்கின்றது. இக்காலத்தின் போது இங்கு வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸுக்கும், 24 டிகிரி செல்சியஸுக்கும் இடைப்பட்ட வெப்பநிலையுடன் காணப்படும். இங்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் போது கோடைகாலம் அதன் உச்சநிலையை எட்டுகிறது.

மழைக்காலம்

இங்கு மழைக்காலம் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை இருக்கும். இக்காலத்தின் போது இப்பகுதி, இடியுடன் கூடிய கடும் மழைப்பொழிவைப் பெறுகிறது. மழைக்கால வானிலை ஈரப்பதம் நிறைந்து, மிகவும் குளிருடன் இருக்கும்.

குளிர்காலம்

இப்பகுதியில் குளிர்காலம் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை நிலவுகிறது. இச்சமயத்தில் இந்தப் பகுதி, 10 டிகிரி செல்சியஸுக்கும், 24 டிகிரி செல்சியஸுக்கும் இடைப்பட்ட வெப்பநிலையுடன் காணப்படும். இதுவே சோம்நாத் செல்ல மிகவும் உகந்த காலகட்டமாகும்.