உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் சோப்பன் எனும் இடத்திலிருந்து 10 கி.மீ தூரத்திலும், ராபர்ட்ஸ்கஞ்ச் எனும் இடத்திலிருந்து 35 கி.மீ தூரத்திலும் உள்ள ரேணுகுட் ரோடு எனும் சாலையில் இந்த அகோரி கோட்டை அமைந்திருக்கிறது.
முற்காலத்தில் கார்வார் வம்ச மன்னர்களால் ஆளப்பட்ட இந்த கோட்டை பின்னர் சந்தேள வம்சத்தார் வசம் வந்திருக்கிறது. ஒரு அதீவாசி இன மன்னரால் கடைசியாக ஆளப்பட்டதால் இது ஆதிவாசி இனத்தார் கோட்டையாக கருதப்படுகிறது.
இந்த வரலாற்றுச்சின்னம் மூன்று புறமும் விஜுல், ரேகு மற்றும் சோன் ஆகிய மூன்று ஆறுகளால் சூழப்பட்டிருக்கிறது. சோன் ஆற்றின் கரையில்தான் இது நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக இந்த கோட்டையை சுற்றிலும் அகழிகள் அமைந்துள்ளன.
ரிஹாந்த் ஆற்றை ஃபெர்ரி பயணிகள் படகு மூலமாக கடந்து இந்த கோட்டையை அடையலாம். சாகசப்பிரியர்கள் இங்குள்ள பள்ளத்தாக்கு பகுதியில் மலையேற்றம் செய்து சோன் ஆற்றுப்பகுதியின் இயற்கை எழிலை ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications