Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோன்பத்ரா » ஈர்க்கும் இடங்கள் » சந்திர பிரபா காட்டுயிர் சரணாலயம்

சந்திர பிரபா காட்டுயிர் சரணாலயம், சோன்பத்ரா

16

சந்திர பிரபா காட்டுயிர் சரணாலயமானது உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சந்தௌலி பிரதேசத்தில் விந்திய மலைப்பகுதியின் அங்கமான விஜய்கர் மற்றும் நௌகர் மலைகளின் மீது 9600 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்திருக்கிறது.

1957ம் ஆண்டு இந்த சரணாலயம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மூன்று ஆசிய சிங்கங்கள் இந்த காட்டில் 1958ம் ஆண்டில் விடப்பட்டிருக்கின்றன. 1969ம் ஆண்டிற்குள் அவற்றின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. இருப்பினும் 1970 ஆண்டில் அவை மறைந்து விட்டன.

ஏராளமான காட்டுயிர்கள் இந்த சரணாலயத்தில் வசிக்கின்றன. சீத்தல் , நில்கை, சிங்கார், பிளாக்பக், சம்பார் போன்ற மான் வகைகள் மற்றும் காட்டுமுயல், குரங்கு, முள்ளம்பன்றி, கழுதைப்புலி, காட்டு நரி, இந்திய காட்டெருமை, காட்டுப்பூனை மற்றும் காட்டுப்பன்றி போன்றவை இதில் வசிக்கின்றன.

பறவை ரசிகர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் விரும்பும் சரணாலயமாகவும் இது விளங்குகிறது. 150 வகையான பறவை இனங்கள் இங்கு வசிக்கின்றன. அரிய பல தாவர வகைகள் மரங்களும் இந்த சரணாலயத்தில் நிரம்பியுள்ளன.

சாகன், அமால்ட்டா, மஹுவா, கொரியயா, பேர், டெண்டு போன்ற மரங்கள் இங்கு உள்ளன. பல மூலிகைச்செடிகளும் ஏராளமாக காணப்படுகின்றன.

சந்திரப்பிரபா மற்றும் கம்னாஷா ஆறுகள் இந்த சரணாலயத்தின் வழியே ஓடுவதால் இவற்றில் பலவகையான மீன் இனங்களும் வசிக்கின்றன. மழைக்காலத்தில் இங்குள்ள நீர்வீழ்ச்சிகள் நிரம்பி வழியும்போது ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு விஜயம் செய்கின்றனர். அச்சமயம் இந்த சரணாலயத்தின் சுற்றுலா செயல்பாடுகள் தீவிரமடைகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed